ரெயில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப தெற்கு ரெயில்வே அவ்வப்போது பல சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரெயில்களால் பயணிகள் நெருக்கடியின்றி தங்கள் பயணத்தை தொடர முடிகின்றது. இந்நிலையில் நேற்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அந்த செய்திக்குறிப்பில் உள்ள விபரம் பின்வருமாறு:
1. திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06075), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து 27ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06076), மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.
2. திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-கிருஷ்ணராஜபுரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06079), மறுநாள் காலை 8.30மணிக்கு கிருஷ்ணராஜபுரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து 24ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்படும் கிருஷ்ணராஜபுரம்-திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06080), மறுநாள் காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும்.
3. திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-கிருஷ்ணராஜபுரம் ‘சுவிதா’ அதிவிரைவு சிறப்பு ரெயில் (00611), மறுநாள் காலை 8.30 மணிக்கு கிருஷ்ணராஜபுரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து 31ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்படும் கிருஷ்ணராஜபுரம்-திருவனந்தபுரம் ‘சுவிதா’ அதிவிரைவு சிறப்பு ரெயில் (00612), மறுநாள் காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும்.
மேலும் கொச்சுவேலியில் இருந்து இன்று அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி கிருஷ்ணராஜபுரம் நோக்கி புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06077), மறுமார்க்கமாக நாளை அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து கொச்சுவேலி நோக்கி செல்லும் சிறப்பு ரெயிலும் (06078) ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு தெற்கு ரெயில்வே தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
English Summary : Details of Thiruvananthapuram to Chennai Central Special train.