Trains-281115-001சபரிமலை பக்தர்களின் வசதியை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, டிசம்பர் மாதம் 20, 27, ஜனவரி 3-ம் தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06142) மறுநாள் காலை 5.15 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

இதேபோல், டிசம்பர் மாதம் 21, 28, ஜனவரி 4-ம் தேதிகளில் மங்களூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06143) மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது

மேலும் பெங்களூர்-நாகர்கோவில் விரைவு ரயில் களில் (17235/17236) டிசம்பர் 2-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரையில் 2-ம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று கூடுதலாக தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளது.

அதேபோல் காச்சிகுடா-மதுரை-காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில்களில் (17615/17616) டிசம்பர் 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு தலா ஒரு ஏசி பெட்டி இணைக்கப்பட உள்ளது.

காச்சிகுடா-மங்களூர்-காச்சிகுடா வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில்களில் (17606/17605) டிசம்பர் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு தலா ஒரு ஏசி பெட்டி இணைக்கப்படவுள்ளது.

ஐதராபாத்-திருவனந்தபுரம்-ஐதராபாத் சபரி விரைவு ரயில்களில் (17230/17229) டிசம்பர் 3-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரையில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

இவ்வாறு நேற்று வெளியான தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary-Special trains for sabarimalai festival