indian_railwaysபொதுமக்கள் சிரமமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு பயன்பெற கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தியன் ரெயில்வேயும் உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரெயில் திட்டத்தை நடந்தி வருகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள ஆன்மீக தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விரைவில் மகா சிவராத்திரி நடைபெறுவதை முன்னிட்டு நவஜோதிர்லிங்கங்களை தரிசிக்க தனி ரெயில் மதுரையில் இருந்து மார்ச் 1-ஆம் தேதி புறப்படுகிறது. இந்த ரெயில் கரூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னை வந்து பின்னர் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம், மகாராஷ்ட்ராவில் உள்ள அவுங்கநாக்நாத், பார்லிவைத்யநாத், குருஷ்னேஸ்வரர், திரையம்பகேஸ்வரர், பீம்சங்கர், மத்திய பிரதேசத்தில் உள்ள மகாகாலேஸ்வரர், ஓம்காரேஸ்வர், குஜராத்தில் உள்ள சோத்நாத் ஆகிய நவஜோதிர்லிங்கங்களை தரிசிக்க 13 நாட்கள் யாத்திரை ரெயில் புறப்படுகிறது.

இந்த யாத்திரை ரெயிலில் செல்ல ஒருவருக்கு சிலிப்பர் பட்ஜெட் ரூ.13,270, சிலிப்பர் ஸ்டேண்டர்டு ரூ.17,930 மற்றும் கம்போர்ட் 3 அடுக்கு ஏ.சி. கட்டணமாக ரூ.23,320 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் ரெயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்குமிடம், சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும். மேலும் விவரங்கள் அறிய சென்ட்ரல் ரெயில் நிலையம் 90031 40681, 90031 40682 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த பயணம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் www.irctctourism.com என்ற இணையதளத்திலும் அறியலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் தெரிவித்தார்.

English Summary: Spiritual Travel on account on Maha Shivaratri.Organized by the Southern Railway.