தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, வரும் 18ஆம் தேதிக்குப் பிறகு மேற்குவங்கக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்றும் நாளையும் தென் வங்கக் கடல் பகுதிக்கும், நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கும் வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.