சென்னையில் பள்ளிக்கூடங்கள் உள்ள சாலைகளில் தினமும் காலையில் பள்ளிகள் ஆரம்பிக்கும் முன்பும், பள்ளி முடிந்த பின்பும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாணவ–மாணவிகளை ஈடுபடுத்தப்படும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது செயல் வடிவிற்கு வந்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாணவ–மாணவிகள் அடங்கிய சாலை பாதுகாப்பு சிறப்பு ரோந்துப்படை எனப்படும் சுற்றுக்காவல் அணி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய பயிற்சி கொடுக்கப்பட்டு பின்னர் பணியில் ஈடுபட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு ரோந்துப்படையின் செயல்பாடு தொடக்க விழா சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு ரோந்துப்படையின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘மாணவ–மாணவிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த விழாவில், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், இணை கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் துரை, போக்குவரத்து வார்டன்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹரீஸ் எல் மேத்தா மற்றும் 4 ஆயிரம் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
English Summary: Streamlining student whose traffic patrol. Chennai inaugurated by Commissioner