மாணவியருக்கு உயர் கல்வி உறுதி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“மாணவியருக்கு உயர் கல்வி உதவி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.