நமது கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் முதல் ஜூன் வரை கோடை கொண்டாட்டமாய் புத்தம் புதிய சூப்பர்ஹட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி, எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் “எண்ணித்துணிக” விறுவிறுப்பான அதிரடி திரைப்படமும், செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதிஷ், ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் “காஞ்ஜூரிங் கண்ணப்பன்” திகில் நிறைந்த நகைச்சுவை திரைப்படமும், கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால் நடிப்பில் “சிங்கப்பூர் சலூன்” விறுவிறுப்பான திரைப்படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடிப்பில் “மாமன்னன்” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.