அனைவராலும் ஸ்பிம்சில் என அழைக்கப்படும் ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பிரவைசர், இளநிலை அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 87
பதவி: Supervisor – 27
பதவி: Junior Technician – 39
பதவி: Junior Office Assistant – 18
வயதுவரம்பு: 9.11.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்புடன், தட்டச்சு கணினி அறிவு பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://bnpdewas.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://bnpdewas.spmcil.com/UploadDocument/Advertisement_eng.fd67d191-0caf-4e99-944f-32980d372623.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.11.2018