சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.மேலும் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய தடை இல்லை என்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்திற்கு 3 நீதிபதிகள் உடன்பாடு.
பெண்களை வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.