தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்ற நடவடிக்கையின் காரணமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் எவ்வித பிரச்சனையும் இன்றி முடிவு பெற்றுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட விக்ரமன் அணியை சேர்ந்தவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியிட்ட அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
2015 முதல் 2017 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க புதிய நிர்வாகிகளின் பட்டியல் விபரம் வருமாறு:
இயக்குநர் சங்கத் தலைவர் – விக்ரமன்
பொதுச் செயலாளர்- ஆர்.கே.செல்வமணி
பொருளாளர் – வி.சேகர்
துணைத் தலைவர்கள் – கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு
இணைச்செயலாளர்கள் – பேரரசு, சுந்தர் சி, ஏகம்பவாணன், லிங்குசாமி, செகதீசன்
செயற்குழு உறுப்பினர்கள் – ரமேஷ்கண்ணன், மனோபாலா, நம்பிராஜன், வேல் முருகன், ராஜா கார்த்திக், திருமலை, ‘ஜெயம்’ ராஜா, ரவிமரியா, கமலக்கண்ணன், மூதுரை பொய்யாமொழி, சமுத்திரகனி, ஐந்துகோவிலான், மனோஜ்குமார், புவனா, ஆர்.கண்ணன், ஆர்.கே.கண்ணன், ஜீவா
புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் 2017ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:Tamil Nadu Film Director Association Executives list released