தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு நர்ஸ்கள் சங்கத்துக்கு புதிய மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்ஸ்கள் மிக ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். தலைவர் பதவிக்கு 4 பேரும், செயலாளர், பொருளாளர் பதவிக்கு தலா 3 பேரும், இரண்டு துணைத் தலைவர் பதவிக்கு 5 பேரும் போட்டியிட்டனர்.

தமிழகம் முழுவதிலும் பதிவான ஓட்டுக்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நர்ஸ்கள் விடுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த தேர்தல் குறித்த வழக்கு ஒன்றில் ஓட்டு எண்ணிக்கையின் முடிவை அறிவிக்க நீதிமன்றம் திடீரென தடை விதித்தது. இந்நிலையில் ஓட்டுக்களை எண்ணும் முடிவு கைவிடப்பட்டதாகவும் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரே ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டது.

English Summary : Nurses union election took place on Saturday. Counting was stopped under courts order, and will continue after courts approval.