கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு, அவர்களது சேமிப்புகளில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி கந்துவட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர்.

எனவே, பொது மக்களின் நலன் கருதி கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டத்தை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன.

  • குறைந்தபட்ச கடன் – ரூ 25000
  • அதிகபட்ச கடன் – ரூ 100000
  • கிராம் ஒன்றுக்கு – ரூ 3300
  • ஆண்டு வட்டி – 6 %
  • ரூ 1000க்கு மாத வட்டி – ரூ 5 மட்டுமே
  • திருப்பி செலுத்தும் காலம் – 3 மாதங்கள்
  • கூடுதல் அவகாச காலம் – 3 மாதங்கள்
  • பரிசீலனை கட்டணம் – 1% + GST
  • நகை மதிப்பீட்டாளர் கட்டணம் – இல்லை
  • பிரதம மந்திரியின் ரூ 2 இலட்சத்திற்கான விபத்து காப்பீடு – இலவசம்

இந்த அளவிற்க்கு குறைந்த வட்டியில் ஒரு நகைக்கடன் திட்டத்தை இந்தியாவில் எந்தஒரு வங்கியிலோ அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களோ இதுவரை அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றிற்கான நகை மதிப்பு தற்போது நடைமுறையிலுள்ள நகை கடன் திட்டத்தை விட 10 சதவீத அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும். அதாவது பொதுவான நகை கடன் திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றுக்கு ரூ 3000 வழங்கப்படும் நிலையில், இப்புதிய கடன் திட்டத்தில் கிராம் ஒன்றுக்கு ரூ 3300 வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் 47 கிளைகளிலும், காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இக்கடன் பெறமுடியும்.

பரிசீலனை கட்டணத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *