சென்னை: நாளை முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து, கோடைக்கு முந்தைய இளவேனில் காலம் நிலவுகிறது. இதனால் பகல் வெயில் மிதமாக உள்ளது இரவில் லேசான ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் நிலவுகிறது.
நேற்று மாலை 5:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மற்றும் கரூர் மாவட்டம், பரமத்தியில், 37 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. மாநிலத்தில் குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 20 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.
நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிராம்பட்டினம் மங்களபுரம் மற்றும் ராஜபாளையத்தில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வரும் நாட்களை பொறுத்தவரை இன்று சில இடங்களில் லேசான மழை பெய்யும். நாளை முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது.