முக்கிய தலைவர்கள் பிறந்த நாளில் மதுவிற்பனைக்கு தடைசெய்யப்படும் வழக்கம் கடைபிடித்து வரும் நிலையில் வருகிற 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சுந்தரவல்லி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னையில் செயல்படும் அனைத்து மதுக்கடைகள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

English Summary : Chennai collector ordered to close Tasmac on January 16th.