திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 2-வது முறையாக நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 5 ஊர்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 104.18 ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 2-வது முறையாக இந்த அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016-ல் மார்ச் 24-ம் தேதி இதே அளவு வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது இந்த நூற்றாண்டில் திருச்சியில் மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
கரூர் பரமத்தி வேலூரில் 102.56, தருமபுரி, வேலூரில் தலா 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

English Summary: Temperature touches 104 degrees in Trichy