தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே மாதம் வெளியாகும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நேற்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியிலும் வெளியிடப்படும் என்று கூறினார்.
மேலும் 2015-16ஆம் கல்வியாண்டு வகுப்புகள் தொடங்கும் போது 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் முதல்வாரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2016-2017-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பாடபுத்தகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்வு முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
English Summary : Exam results will be announced in May for 10th and 12th grade students.