கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு வருகிற ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும்.

சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

 

10ம் வகுப்பு பொது தேர்வுக்கான புதிய அட்டவணை

  • ஜூன் 1 – மொழிப்பாடம்
  • ஜூன் 3 –  ஆங்கிலம்
  • ஜூன் 5 –  கணிதம்
  • ஜூன் 6 –  விருப்ப மொழிப்பாடம்
  • ஜூன் 8 – அறிவியல்
  • ஜூன் 10 –  சமூக அறிவியல்

 

நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ந்தேதி நடைபெறும்.

இதே போன்று வரும் 27ந்தேதி பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *