trainரயில் பயணிகளின் கூட்டம் அதிகரிப்புக்கு ஏற்றவாறு அவ்வபோது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில், சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்புக் கட்டண ரயில்

1. (ரயில் எண் 06183): பிப்ரவரி 5, 12 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

2. ரயில் எண் 06184: பிப்ரவரி 7-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்

1. (ரயில் எண் 00644): பிப்ரவரி 14-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

English Summary: The announcement of the special train from Chennai to Tirunelveli.