பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கும், மிகப் பெரிய பட்ஜெட்டை நேர்த்தியாக கையாண்டதற்காகவும் நாம் நமது உண்மையான பாராட்டுகளை கனவுகளை நனவாக்கும் ஷங்கர் சாருக்கு சொல்லியே ஆக வேண்டும். இதுதான் படத்தின் ஆன்மாவைப் பற்றி பேசுவதற்கான தருணம்.
பிக்சார் அல்லது டிஸ்னி ஃபில்ம்ஸ் தயாரிப்புகளில் ஒரே ஒரு விஷயம் பொதுவானதாக இருக்கும். அவர்கள் குழந்தை ரசிகர்களை குறிவைத்து எடுக்கும் அனிமேஷன் திரைப்படங்கள் எல்லாம் சொல்லி வைத்ததுபோல் குழந்தைகளுக்கு உலகப் பொது மறை ஒன்றை போதிப்பதாக இருக்கும்.
ஆனால், 2.0-வில் நீங்கள் வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த குழந்தைகளுக்கும் உங்களது மாய பிரம்மாண்டத்தின் மூலம் நன்நெறியை பரந்துபட்டு போதித்துள்ளீர்கள்.
மெகா ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், லைகா தயாரிப்பாளர் என உங்களது கரு மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. உங்களது 25 ஆண்டு கால நேர்த்தியான கடின உழைப்புக்கும் அதன் மீதான உங்களது பேரார்வத்துக்கும் அதை நீங்கள் நீடித்த வெற்றியாக்கியதற்குமான சாட்சிதான் இந்த நம்பிக்கையும் அதற்காக ஒதுக்கப்பட்ட பெரும் பட்ஜெட்டும்.
இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம். அதன் டேக்லைன் ‘இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..’ என்பதே. இதற்கு, மனிதர்களுடன் ரோபோக்களும் இருக்கும் என்று அர்த்தமல்ல. மீண்டும் ஒருமுறை படத்தைப் பாருங்கள். அன்றும் இன்றும் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர் சார். அவ்வளவுதான்.
இவ்வாறு அறிவழகன் பதிவிட்டிருக்கிறார்.