உலக நாயகன் கமல்ஹாசன் நேற்றிரவு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால்எலும்பு ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பூரண குணமாக இன்னும் சிலவாரம் ஆகலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தற்போது ‘சபாஷ்நாயுடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக இருந்தார். அடுத்த வாரம் விசாகப்பட்டிணத்தில் அவர் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பினை தொடங்க இருந்த நிலையில் திடீரென அவருக்கு இந்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு மாத காலம் அவர் பூரண குணமடைய ஆகும் என்ற நிலைமை இருப்பதால் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அனைத்து பணிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
English Summary : The famous actor Kamal Hassan admitted to hospital