சென்னை: ‘பெய்ட்டி’ புயல் வங்க கடலில் வலு இழந்ததால் கடலின் சூழல் மாறியுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் லேசான மழை துவங்கும் என வானிலை மையம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை நிலவினாலும் மழை பொழிவு குறைவாக உள்ளது.டிச., 6க்கு பின் தமிழகம் புதுச்சேரியில் மழை பெய்யவில்லை. 9ல், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 15ல், புயலாகமாறியது. தமிழக கடல் பகுதியை ஒட்டி புயல் கடந்த போதிலும் மழை பொழிவைதரவில்லை.
இந்நிலையில் பெய்ட்டி புயல் ஆந்திராவை கடந்து, ஒடிசா அருகே நேற்று வலுவிழந்தது. எனவே வங்க கடலின் பெரும்பாலான பகுதிகளில் சூழல் மாறியுள்ளது .இந்நிலையில் வங்க கடலின் தென் மேற்கு கிழக்கு பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
அதனால் நாளை முதல் தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் லேசான மழை துவங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. வரும் 22ம் தேதி சில இடங்களில் கன மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.