அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .
குறிப்பாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம், அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள், அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய புதிய தொழில்நுட்பத்தில் 10 வாகனங்கள், 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள், வரும் கல்வியாண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முக்கிய திட்டங்கள் தமிழக பள்ளி கல்வித் துறைக்கு வர உள்ளது.