சென்னை: தமிழகத்தின் சில இடங்களில், நான்கு நாட்களுக்கு, லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.
கோடையின் துவக்கமாக, தமிழகம், புதுச்சேரியில், பிப்ரவரி மற்றும், மார்ச் முதல் வாரத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒரு வாரமாக, வெப்பநிலை இயல்பாக உள்ளது. கடலோர பகுதிகளில், மாலை மற்றும் இரவில் கடல்காற்று வீசுகிறது. இந்நிலையில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மார்ச் 18) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மார்ச் 18) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதன்பிறகு, வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.
மதுரை தெற்கில் 101 டிகிரி: வெப்பநிலையை பொருத்தவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை தெற்கில் 101, மதுரை விமான நிலையத்தில் 99, சேலத்தில் 98 டிகிரியும் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை பதிவானது என்றனர்.