pay_onlineசென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்பு விருந்தினராக எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் கலந்து கொண்டார். அவருடன் மண்டல மேலாளர்கள் (மார்க்கெட்டிங்) பி.முரளிதரன், (தகவல் தொடர்பு) ஜான்சன் ஆகியோர்க்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு தங்கள் இணையதளத்தில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாவும் பாலிசியின் மீது கடன் வாங்கிய வாடிக்கையாளரகள் இனிமேல் இணையத்தின்மூலம் கடன் தொகையை செலுத்தும் வசதி இன் னும் ஒருசில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது;
எல்ஐசியில் மொத்தம் 23 பாலிசிகள் நடைமுறையில் உள்ளன. இந்த ஆண்டு ஜீவன் ஷிகர், ஜீவன் லாப், ஜீவன் ப்ரகதி, ஜீவன் தருண் மற்றும் நியூ எண்டோமென்ட் பிளஸ் என 5 புதிய பாலிசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில், ஜீவன் ஷிகர் பாலிசி வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இது 10 மடங்கு ஆயுள் காப்பீட்டைக் கொண்டுள்ளது. 6 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். உதாரணமாக ஒரு லட்சம் செலுத்தினால் 15 ஆண்டுகள் கழித்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கிடைக்கும். மேலும், செலுத்தப்படும் பிரீமியத்துக்கு வருமானவரி விலக்கும் உண்டு.

இப் பாலிசியை ஒரு லட்சம் விற்பனை செய்வதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் பிரீமியம் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதியோருக்கான ‘வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா’ திட்டத்தின் மூலம் ரூ.800 கோடி காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. பாலிசிகளின் முதிர்வுத் தொகையை பாலிசிதாரர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பரிமாற்ற முறையில் (என்இஎப்டி) செலுத்தும் வசதியின் கீழ் இதுவரை 75 சதவீத பாலிசிதாரர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 25 சதவீதம் பாலிசிதாரர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் இம்மாத இறுதிக்குள் சேகரிக்கப்படும். அதன் பிறகு காசோலை மூலமான பணப் பரிவர்த்தனை இருக்காது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் எல்ஐசி தென்மண்டல அலுவலகம் மூலம் 16 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.2 ஆயிரம் கோடி பிரீமியம் திரட்டப்பட்டுள்ளது. இதில், மார்ச் மாதத்தில் மட்டும் 5 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்து அதன் மூலம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பிரீமியம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குழுக் காப்பீட்டு வணிகத்தில், அகில இந்திய அளவில் தென் மண்டலம் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக இலக்கை பூர்த்தி செய்து முதலிடம் வகித்துள்ளது. இதுவரை 60,886 பேருக்கு ரூ.723 கோடி இறப்பு உரிமத் தொகையாக வழங்கியுள்ளோம். மார்ச் முதல் வாரம் வரை, 14.75 லட்சம் காப்பீடுகள் புதுப்பிக்கப்பட்டு ரூ.1,239 கோடி காப்பீட்டுத் தொகையாகப் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு சித்தார்த்தன் கூறினார்.

 

English Summary:The new facility in the amount of the loan to pay online. LIC Zonal Manager Information.