சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆருக்கு, கடந்த 2017ம் வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எம்ஜிஆர் நினைவு வளைவு மெரினாவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதணர்கான் பணிகளும் வேகமாக தொடங்க ஆரம்பித்தது. கடைசியாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2018 செப்டம்பர் 30-ஆம் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய வேலை தொடர்ந்து நடந்து வந்தது.
இதை கட்ட 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வளைவிற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் இதன் கட்டிட பணிகள் வேகமாக நின்றது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை விழா நடத்தி தடை திறக்க விதிப்பதாக கூறியுள்ளனர். கட்டுமான பணிகளை முடிக்கலாம். ஆனால் விழா நடத்த கூடாது என்று கூறினார்கள்.
இந்த நிலையில் தற்போது சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விழா எதுவுமின்றி திறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை திரைகள் அகற்றப்பட்டு எம்ஜிஆர் வளைவு திறக்கப்பட்டுள்ளது.