கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ. 700ல் இருந்து ரூ. 800க்கும், ஐஸ் மல்லி, காட்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ. 500க்கும், கனகாம்பரம் ரூ. 400க்கும், அரளி பூ ரூ. 200க்கும், சாமந்தி ரூ. 240க்கும், சம்பங்கி ரூ. 120க்கும், சாக்லெட் ரோஸ் ரூ. 70க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 80க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று அனைத்து பூக்களின் விலையும் குறைந்தது. ஒரு கிலோ மல்லி, முல்லை, ஜாதிமல்லி, காட்டுமல்லி ரூ. 300க்கும், ஐஸ் மல்லி ரூ. 250க்கும், கனகாம்பரம் ரூ. 350க்கும், சாமந்தி ரூ. 200க்கும், சம்பங்கி ரூ. 80க்கும், சாக்லெட் ரோஸ் ரூ. 70க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 50க்கும் அரளி பூ ரூ. 150க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறியதாவது, ‘‘ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு மல்லி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில், சில்லரை வியாபாரிகள் மல்லியை வாங்கி சென்றதால், மல்லி பூவிற்கு தட்டுபாடு ஏற்பட்டது. ஈஸ்டர் பண்டிகை முடிந்த நிலையில், ஒரே நாளில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. விசேஷ நாட்கள் வரும்வரை, அனைத்து பூக்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்,’’ என்றார்.