சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.
மேலும், குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. எனவே, அந்தமான் மற்றும் மத்திய தென் கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், நவம்பர் 13ம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.