புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கின்றன.
அந்த வகையில் கியாஸ் சந்தை விலை மீது விதிக்கப்பட்ட வரியின் விளைவால் தற்போது விலை குறைந்து இருப்பதால் 14.2 கிலோ கியாஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மானியத்துடன் கூடிய சிலிண்டருக்கு ரூ.1.46 குறைந்துள்ளது. மானியம் இல்லாத சிலிண்டருக்கு ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து உள்ளது.