பத்திரப்பதிவில் முதலில் வரு பவருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டோக்கன் எண் வழங்கி, பதிவு செய்யும் திட்டம் 50 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழக பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ என்ற புதிய மென் பொருள் மூலம் ஆன்லைனில் பதிவுகள் நடக்கின்றன. கணினி யிலேயே ஆவணத்தை தயாரித்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் திட்டம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பதிவுக்காக வருவோரை காத்திருக்க வைக்கா மல், முதலில் வருபவர்கள் முதலில் பதிவு முடித்து வெளியேறும் (First In First Out) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போது தமிழகத்தில் 50 பதிவு மாவட்டங்களில் தலா ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இத்திட்டம் தமிழ கம் முழுவதும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தி.நகர், கணபதி, ராஜபாளையம், கல்லிடைக்குறிச்சி, சூரமங்கலம், சிறுபாக்கம், திருத்துறைப்பூண்டி, ஆம்பூர், திருச்சி ஆகிய இடங் களில் உள்ள சார்பதிவாளர் அலு வலகங்களில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. தொடர்ந்து, சேலம் – தடாகபட்டி, வேலூர் – ஆற் காடு, கோவை- திருப்பூர், திருச்சி- குளத்தூர், நெல்லை – நெல்லை, மதுரை – அரசரடி, கடலூர்- அனந்தபுரம், சென்னை- சேலையூர், தஞ்சை- எரண்டம்புலிக்காடு ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் கொண்டுவரப்பட்டது. தற்போது பதிவு மாவட்டத்துக்கு ஒரு அலு வலகம் என 50 அலுவலகங் களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ஒரு நாளைக்கு 50 பதிவுகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதாவது, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 10 டோக்க ன்கள் என, காலை 10 – 11, 11-12, 12-1, 1.30 – 2.30 மற்றும் 2.30 – 3.30 என 5 மணி நேரங்களில் 50 டோக்கன் கள் ஆன்லைனில் வழங்கப் படும். பத்திரப் பதிவுதாரர்கள், ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தால், காத்திருக்காமல் பதிவு செய்து விட்டு சென்றுவிடலாம்,
ஒரு வேளை குறித்த நேரத்தில் அவர் வரத் தவறினால், அடுத்த ஒரு மணி நேரத்தின் இறுதியில் பதிவு செய்ய முடியும். அப்போது சம்பந்தப்பட்டவர் வரவில்லை என் பதை உறுதி செய்து, கணினியில் அதற்கான பகுதியில் உரிய கார ணத்தைப் பதிவு செய்து சார் பதிவா ளர் அந்த வாய்ப்பை வழங்குவார்.
அந்த நேரத்திலும் வர இயலா விட்டால் மாலை 3.30 மணிக்கு பதிவு செய்யலாம். அன்று பதிவுக்கு வர இயலவில்லை என்றால், மீண் டும் நேரத்துக்காக பதிவு செய்து, டோக்கன் எண் பெற்று, பதிவு ஒதுக் கப்பட்ட நேரத்தில் பதிவு செய்யலாம். இதன்மூலம், சார்பதி வாளரைச் சுற்றி நின்று தங்களது பத்திரம் எப்போது பதிவு செய்யப் படும் என்று காத்திருக்க வேண்டிய தில்லை. அதே நேரம். சார்பதிவாள ரும் தனக்கு வேண்டியவருக்கு இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்து தரவும் முடியாது. அவ்வாறு புகுத்தப்படும் பத்திரங்களைக் கணினி ஏற்றுக் கொள்ளாது.
எண்ணை காட்டும் திரை: இந்தச் சேவையை மேலும் மேம் படுத்தும் வகையில், டோக்கன் எண் ணைக் காட்டும் திரை விரைவில் சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட உள்ளது. அதற்கான கருவிகள் கொள்முதல் பணி நடந்து வருகிறது. இந்த முறை வந்தால், காத்திருப்பு அறையில் இருப்போர் தங்கள் டோக்கன் எண்ணைப் பார்த்து அதன்படி பதிவுக்கு வரலாம். இந்த திட்டம் அனைத்து சார்பதிவாளர் அலுவல கங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக படிப்படியாக பல திட்டங் கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு, தற்போது வரை 14 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன’’ என்றார்.