high

கடந்த 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்ட ஹெல்மெட் விவகாரத்தில் சமரசம் எதுவும் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படம் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று கடந்த ஜூன் 15ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மற்றும் திருச்சியை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டும் வக்கீல்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அரசு தரப்பு வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ‘இதற்கு முன்பு ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு பொதுமக்களின் கருத்தை தமிழக அரசு கேட்டது. ஆனால், இந்த முறை அவசர கதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டதால், தரமான ஹெல்மெட் கிடைக்கவில்லை. தரம் குறைந்த ஹெல்மெட் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கியுள்ளனர். இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வக்கீல்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துதான் வாகனங்களை ஓட்டுகின்றனர். அதே நேரம் ஒரு சில பேர் அணியாமல் இருக்கலாம்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதி, ‘மத்திய, மாநில அரசுகளின் கருத்தை கேட்ட பின்னர்தான், கால நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. நான் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுப் பெறும் வரை இந்த கட்டாய ஹெல்மெட் உத்தரவு தீவிரமாக செயல்பட உறுதியுடன் இருப்பேன். ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. யானை வாங்குபவர்கள் அங்குசத்தையும் சேர்த்துதான் வாங்க வேண்டும்.

இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஹெல்மெட் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் மதுரை, திருச்சியை சேர்ந்த வக்கீல்கள் செயல்பட்டுள்ளனர். வக்கீல்கள் என்பவர்கள் இந்த நீதித்துறையின் ஒரு அங்கம். அவர்கள் இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் விதமாக வக்கீல்கள் செயல்படலாமா? இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று கூறினார்.

English Summary:There is no compromise in the direction of the helmet . High Court judge confirmed