திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் கூட்டத்திற்கு பின்னர், அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 25 வயதுக்குட்பட்டவர்கள் “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதுவது போன்று “கோவிந்தா” நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல, 10 லட்சத்து 1,116 முறை கோவிந்தா நாமத்தை எழுதி வருபவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு மட்டும் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் அதிகநேரம் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.