kamal-121115திபெத் நாட்டின் புத்தமத தலைவர் கடந்த 9ஆம் தேதி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் மறுநாள் நவம்பர் 10ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நடிகை கவுதமியும் உடனிருந்தார். தலாய்லாமாவை சந்தித்தது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுவதாவது:

“இன்று காலை (நவம்பர் 10) தலாய் லாமா அவர்களை சந்தித்தேன். அவரது இணகத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக இருப்பதும், இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை எனினும் இந்த சந்திப்பு எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.

எனக்கு ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதே போல அவருக்கு சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. ‘நான் இதுவரை ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை’ என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த ‘அகிம்சை’ என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார்

அகிம்சையின் பால் எனக்குமிருக்கும் நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன்.

அவர் அறிமுகம் இல்லாத யாருடனும், அவருக்கு அந்நியமான எங்களுடன் நேரம் செலவழிப்பதை அவர் விரும்பி உற்சாகத்தோடு உரையாடினார்.. அது எனக்கு 2000 ஆண்டுகள் பழமையான சமணர் கவிதையை ஞாபகப்படுத்தியது

யாதும் ஊரே யாவரும் கேளிர்”

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
English summary- Tibetan spiritual leader the Dalai Lama advices actor kamal