TH-STATION_1316556fரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்யும் கூட்டம் அதிகமாகி வருவதாகவும், இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து விட்டு வேறு வகுப்புகளில் பயணம் செய்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதாகவும் தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு புகார்கள் குவிந்து வருவதால் இதுகுறித்து ரெயில்வே மேலதிகாரிகளின் உத்தரவின்படி இன்று முதல் 5 நாட்களுக்கு தென்னக ரெயில்வே அதிரடி சோதனையில் இறங்கவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை கோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 15-ந்தேதி வரை தீவிர டிக்கெட் பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனையில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம்செய்பவர்கள், இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்துவிட்டு முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்கள் என முறைகேடான பயணம் செய்பவர்கள் பிடிக்கப்படுவார்கள்.

இவ்வாறு முறைகேடான முறையில் பயணம் செய்பவர்கள் ரெயில்களில் இருந்து இறக்கிவிடப்படுவார்கள். மேலும் குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் முதல் வகுப்பு கட்டணத்தில் 10 மடங்கு அதிகமாக சேவை கட்டணமும் சேர்த்து அபராதம் வசூலிக்கப்படும். மேலும் ரெயில்வே மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary :Tickets for the first 5 days of intensive Checking in Suburan Trains . Southern Railway decided