பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 8 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது.

நேர மாற்றம் செய்யப்பட உள்ள ரயில்களின் விவரங்கள்:

சென்னை சென்ட்ரல்-கோவைக்கு இயக்கப்படும் சேரன் அதிவிரைவு ரயில் (எண்: 12673):

  • காட்பாடி ரயில் நிலையத்தை இரவு 11.48 மணிக்குப் பதிலாக, இரவு 11.53 மணிக்கு சென்றடையும்.
  • இந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 1.03 மணிக்குப் பதிலாக, அதிகாலை 1.13 மணிக்கு சென்றடையும்.
  • இந்த நேர மாற்றம் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி அமலுக்கு வர உள்ளது.

மேல்மருவத்தூர்-விழுப்புரத்துக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் (06725):

  • காலை 11.30 மணிக்கு பதிலாக, 11.45 மணிக்குப் புறப்படும்.
  • இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பை மதியம் 1.15 மணிக்குப் பதிலாக, மதியம் 1.20 மணிக்கு சென்றடையும்.
  • இந்த நேர மாற்றம் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

அரக்கோணம் – வேலூர் இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (06735):

  • மதியம் 2.05 மணிக்குப் பதிலாக, மதியம் 2.40 மணிக்குப் புறப்படும்.
  • இந்த ரயில் வேலூர் கன்டோன்மென்ட்டை மாலை 4.35 மணிக்குப் பதிலாக, மாலை 4.50 மணிக்கு சென்றடையும்.
  • இந்த நேரம் மாற்றம் ஆகஸ்ட் 14-ம் தேதி அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி – புதுச்சேரிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (22404 ):

  • சென்னை எழும்பூரை காலை 9.30 மணிக்குப் பதிலாக, காலை 9.40 மணிக்கு வந்தடையும்.
  • இந்த ரயில் புதுச்சேரியை மதியம் 1.15 மணிக்குப் பதிலாக, மதியம் 1.20 மணிக்கு சென்றடையும்.
  • இந்த நேர மாற்றம் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதுதவிர 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *