தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை வாங்காமல் சாமி கும்பிட வந்திருக்கும் பக்தர்கள் கூட்டம் காரணமாக திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் அனைத்து அறைகளும் நிரம்பி காணப்படுகின்றன.
அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு கொளுத்தும் வெயிலில் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் இலவச தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
300 ரூபாய் தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் நிலவுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ள காரணத்தால் இன்று துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி பிரேக் தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்களை வாங்க இயலாது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளது.