சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக ஏராளமான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியின் கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 31ஆம் தேதி வரை விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது.
இது குறித்து TNPSC செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ”கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 12 என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரையும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜனவரி 2ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை தேர்வு எழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English summary-TNPSC extends VAO application deadline