டி.என்.பி.எஸ்.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (விஏஓ) வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
813 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களை நிரப்ப வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது., ஆனால் தற்போது இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் பிப்ரவரி 28ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
அதேபோல் விஏஓ தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விஏஓ பணியில் சேர்பவர்களுக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்பும் உள்ளது.
6 ஆண்டு விஏஓ பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.
English summary-TNPSC: VAO examinations postponed to 28th February