முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 14ம்) இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை வேறு பாணியில், சாச்சா நேரு என்று குழந்தைகள் மகிழ்ச்சியோடு கூறி வருகிறார்கள்.

இன்றைய தினத்தை பள்ளிகளில் மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் தான் குழந்தைகள் தினம்.

உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…

> உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.

> 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

> குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் நேரு.

> குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.

எனவே இன்றைய தினத்தில் நமது குழந்தைகள் மட்டும் இல்லாமல் அனைது குழந்தைகளையும் நம் பிள்ளை போன்றே எண்ணி, அவர்களது நலனை உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *