வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெய்ட்டி புயலாய் இன்று ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ளது. வடதமிழகத்தில் கடல்சீற்றம் உள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறியுள்ள நிலையில், ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்றுகரையை கடக்க உள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் வடபகுதிகளில் மிதமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடதமிழகத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் குளிர்காற்று வீசி வருவதால், 23 டிகிரி செல்சியஸ்வரை வெப்பநிலை குறைந்துள்ளது. குளிர்பிரதேசம் போல சென்னை மாறியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.