கடந்த 2ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 49 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைத்தன. இதனைத் தொடர்ந்து இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக இன்று அதிகாலை முதல் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் – டீசலின் விலை குறைக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி இன்று அதிகாலை முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசுகள் குறைந்து, ரூ.61.90-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.40 சரிந்து ரூ.50.21-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெட்ரோ மற்றும் டீசல் விலை விபரங்கள்
புதுடில்லி: பெட்ரோ விலை ரூ.59.20/லிட்டர், டீசல் ரூ.47.20/லிட்டர்
கொல்கத்தா: பெட்ரோ விலை ரூ.66.81/லிட்டர், டீசல் ரூ.52.08/லிட்டர்
மும்பை: பெட்ரோ விலை ரூ.66.68/லிட்டர், டீசல் ரூ.54.26/லிட்டர்
English Summary : Today Fuel price reduction