சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் ஒன்று இன்று சென்னை சூளைமேடு பகுதியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், 17 நல வாரியங்களை ஏற்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம், விசைத்தறி நெசவாளர் நல வாரியம், வீட்டுத் தொழிலாளர்கள் நல வாரியம் உள்பட 17 நல வாரியங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கானச் சிறப்பு முகாம் ஜனவரி 21ஆம் தேதி அதாவது இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த முகாம் சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடம், திருவேங்கடபுரம் முதல் தெரு, சூளை மேடு சென்னை-94 என்ற முகவரியில் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதுவரை உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளாத சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டு, அரசு வழங்கும் நலத் திட்டங்களைப் பெற்றுப் பயனடையலாம்.
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
English Summary: Today,Special Camp for member of the Board of unorganized labor in Chennai .