சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனத்தின் மெட்ரோ ரயில் பகுதி 5ஆக போரூர் முதல் கத்திபாரா வரை உயர்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான (எல்&டி) நிறுவனம் மவுண்ட்-பூந்தமல்லி சாலை முகலிவாக்கத்தில் மின் வடங்கள் செலுத்துவதற்கு துளையிடும் பணி மேற்கொண்டு வருகிறது.
ஆகவே, இன்று முதல் வாரந்தோறும் சனிகிழமை இரவு 11 மணிமுதல் திங்கள் கிழமை காலை 5 மணிவரை மெட்ரோ பணிமேற்கொள்ள ஏதுவாக குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
1. சென்னை பூந்தமல்லியிலிருந்து கிண்டி நோக்கிசெல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) போரூர் சுங்கச் சாவடி சர்வீஸ் சாலை வழியாக சென்னை புறவழிச்சாலை மூலம் அவர்களது இலக்கை சென்று அடையலாம்.
2. அனைத்து வணிக வாகனங்களும் சாலை வழியாக போரூர் நோக்கி செல்லும் மற்றும் கனரக வாகனங்களும் போரூர் சந்திப்பில் மாற்றுபாதையில் ஆற்காடு சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.
3. குன்றத்தூரில் இருந்து போரூர் சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) மாற்று பாதையில் போரூர் சந்திப்பில் ஆற்காடு சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம். சென்னை கத்திபாராவில் இருந்து போரூர் மற்றும் பூந்தமல்லி நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (அரசு பேருந்துகள் தவிர்த்து) மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் மேற்கண்ட தினங்களில் மெட்ரோ பணி நடைபெறுவதால் அன்றைய தினம் இந்த வாகனங்களை உள்வட்ட சாலையில் கோயம்பேடு வழியாக இயக்குவதற்கு சாலை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் நாட்கள் மற்றும் நேரம்:
- 17-06-2023 இரவு 11 மணி முதல் 19-06-2023 காலை 05.00 மணிவரை
- 24-06-2023 இரவு 11 மணிமுதல் 26-06-2023 காலை 05.00 மணிவரை
- 01-07-2023 இரவு 11 மணிமுதல் 03-07-2023 காலை 05.00 மணிவரை
- 08-07-2023 இரவு 11 மணிமுதல் 10-07-2023 காலை 05.00 மணிவரை
- 15-07-2023 இரவு 11 மணிமுதல் 17-07-2023 காலை 05.00 மணிவரை
- 22-07-2023 இரவு 11 மணிமுதல் 24-07-2023 காலை 05.00 மணிவரை