tatkal-ticket-booking-timings-changesரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் குறைகளைத் தெரிவிக்க, முதன்மை வர்த்தக மேலாளர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு அதிகாரியை அணுகலாம் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு புகார்களைப் பதிவு செய்ய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:

ரயில் நிலைய கவுன்ட்டர்களில் பயணச் சீட்டு வாங்கும்போது, பணிபுரியும் ஊழிர்கள் முறையாக சில்லறைகளை வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், முறையான சில்லறைகளைக் கொடுக்குமாறு பயணிகளை சில ஊழியர்கள் வற்புறுத்துவதாகவும் புகார்கள் குவிந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பயணிகள் உடனடியாக தங்களது பிரச்சனைகளை பயணச் சீட்டு கவுன்ட்டர் மேற்பார்வையாளரிடம் கொண்டு செல்லலாம். அப்படியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், முதன்மை வர்த்தக மேலாளர் சிறப்பு அலுவலரின் தொலைப்பேசி எண்ணான 044-2535 4405-இல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், ரயில்வேயில் நிலவும் பல்வேறு குறைகளை 138 எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட கோட்டங்களில் உள்ள உதவி எண்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

சென்னை- 044-25354457

மதுரை – 0452-2308250

திருச்சி – 0431-2418992

சேலம் – 0427-2431010

திருவனந்தபுரம் – 0471-2326484

பாலக்காடு – 0491-2552755

English Summary : Train ticket counter at the problem? Introduction to complain telephone numbers