trains-181115தமிழகத்தை போலவே ஆந்திர மாநிலத்திலும் கனமழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கிளம்பும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை – ஜம்முதாவி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 27 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடமாநிலங்களுக்கு செல்லும் 2 ரெயில்கள் ஆந்திரா மாநிலத்துக்கு பதிலாக கர்நாடக மாநிலம் மங்களூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்ட 27 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விபரங்கள் வருமாறு:

சென்னை சென் ட்ரலில் இருந்து கிளம்பும் ரயில்கள்:

1. சென்னை சென்டிரல் – ஜம்முதாவி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16031)
2. சென்னை சென்டிரல் – விஜயவாடா ஜங்சன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12077),
3. சென்னை சென்டிரல் – ஹவுரா எக்ஸ்பிரஸ் (12842),
4. சென்னை சென்டிரல் – அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (12656),
5. சென்னை சென்டிரல்- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (12603),
6. சென்னை- சென்டிரல் ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12759),
7. சென்னை சென்டிரல் – டெல்லி கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் (12615),
8. சென்னை சென்டிரல்- ஹவுரா மெயில் (12840),
9. சென்னை சென்டிரல் – கூடுர் பயணிகள் ரெயில் (57239),
10.சென்னை சென்டிரல் – மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் (11042),
11.சென்னை சென்டிரல்- மும்பை சி.எஸ்.டி. மெயில் (11028).

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயில்கள்:

12. சென்னை எழும்பூர்- தாதர் எக்ஸ்பிரஸ் (12164),
13. சென்னை எழும்பூர் – காச்சிகூடா எக்ஸ்பிரஸ் (17651),
14. சென்னை எழும்பூர்- காக்கிநாடா போர்ட் சேர்கார் எக்ஸ்பிரஸ் (17643),
15. புதுச்சேரி- டெல்லி எக்ஸ்பிரஸ் (22403),
16. புதுச்சேரி- புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (12897),
17. புதுச்சேரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (12868),
18. விழுப்புரம் – காரக்பூர் (22604),
19. மன்னார்குடி – திருப்பதி எக்ஸ்பிரஸ் (17408),
20. ராமேஸ்வரம் – மண்டுவாடி (15119),
21. ஆலப்புழை – தன்பத் டாடா எக்ஸ்பிரஸ் (13352),
22. திருவனந்தபுரம் – ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் (17229),
23. எர்ணாகுளம் – பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (22816),
24. கன்னியாகுமரி – நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641),
25. நாகர்கோவில்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் (17236),
26. மங்களூர்- காச்சீகூடா எக்ஸ்பிரஸ் (17605),
27. சென்னை சென்டிரல் – ஹவுரா சிறப்பு ரெயில் (02848)

மேற்கண்ட 27 ரெயில்களும் இன்று ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் திருவனந்தபுரம் – டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (12625) மற்றும் கன்னியாகுமரி – மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் (16382) இந்த 2 ரெயில்களும் இன்று (புதன்கிழமை) சொர்னூர், மங்களூர் ஜங்சன், கொங்கன் ரெயில்வே பாதை வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

பயணிகள் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தகவல் மையம் தொலைபேசி எண் 044- 2535 7398 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English summary-trains cancelled due to heavy rain in chennai