இளம் இசையமைப்பாளர்களில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பதோடு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீதிவ்யாவுடன் அவர் நடித்து வரும் பென்சில் திரைப்படம்தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் திரைப்படம் எனினும், அவர் நடித்த ‘டார்லிங்’ முன்கூட்டியே ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டும் ஆகிவிட்டது.

ஜி.வி.பிரகாஷின் பென்சில்’ திரைப்படம் விரைவில் வெளியாக முயற்சிகள் நடந்து வரும் நிலையில் அவர் மேலும் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் நாளை அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தின் பாடல் உரிமையை பெற்றுள்ள சோனி மியூசிக் ந்சிறுவனம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ், மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

‘கோ’ படத்திற்கு அற்புதமாக ஒளிப்பதிவு செய்த ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Trisha-Nayandara Movies Teaser Release on Tomorrow