உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேண்டா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட தயார் நிலையில் உள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜெகதீஷ் இயக்கியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் ஜெகதீஷ் கூறுகையில், ‘உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே இந்த படத்தின் கதையை கேட்டு அவர் ஓகே செய்ததாக கூறினார்.

மேலும் இந்த படத்தில் உதயநிதி நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் அசத்தியிருப்பதாகவும் கூறினார். இந்த படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ளதாக கூறிய அவர், ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மற்றொருவர் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்று இருவருக்கும் புதிய பட்டங்களையும் அவர் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Two Super stars in Nanbenda says director. Lady Super star Nayanthara and Comedy super star Santhanam.