மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரி எண்ட்ரி ஆன ஜோதிகா, இந்த படத்தின் ரிலீஸை பெரிதும் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய ஜோதிகா, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் தமிழில் அதிகம் வெளிவராத நிலைமைக்கு வருத்தம் தெரிவித்தார். மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனால் இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில்தான் ரீ எண்ட்ரி ஆகவேண்டும் என காத்திருந்ததாகவும், தற்போது தனது எண்ணம் ஈடேறிவிட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் ’36 வயதினிலே’ படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி படத்தில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அவர்கள் படக்குழுவினர்களை வற்புறுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு கட் கூட இல்லாமல் இயக்குனர் எடுத்துக் கொடுத்த அனைத்து காட்சிகளையும் அனுமதித்த தணிக்கை அதிகாரிகளுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.
படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதால் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளரும், ஜோதிகாவின் கணவருமான சூர்யா மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது. ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர் ஆகியோர்களுடன் சூர்யா, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.
English Summary : Malayalam remake film “36 Vayathinile” gets ”U” certificate.