தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று சென்னை மாவட்டா ஆட்சி தலைவர் உள்பட ஒருசில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
1.சென்னை கலெக்டராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ், கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.தஞ்சாவூர் கலெக்டராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
3. நாமக்கல் கலெக்டராக ஆசியா மரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. வேலூர் கலெக்டராக ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. திருவாரூர் கலெக்டராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. கடலூர் கலெக்டராக ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. திண்டுக்கல் கலெக்டராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார்.
8.விருதுநகர் கலெக்டர் ராஜாராமன் நகர நிர்வாக இணைய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. கோவை முன்னாள் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தோட்டக்கலைத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. கடலூர் கலெக்டர் சுரேஷ் குமார் நில நிர்வாக இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. வேலூர் கலெக்டர் நந்தகோபால், கால் நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. தஞ்சை கலெக்டர் சுப்பையன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குனராகநியமிக்கப்பட்டுள்ளார்.
13, திருவாரூர் கலெக்டர் மதிவாணன் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
14.கரூர் சீனியர் கலெக்டர் காகர்லா உஷா நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை லிமிடெட் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: utbreak Transferred of IAS officers, including Chennai collector