கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி “வா தமிழா வா”.
தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்கும் ஓர் மேடை அமைத்து தருகிறது.
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை, கிரிக்கெட்டில் “தல” என கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி பற்றிய தலைப்பில் பேச இருக்கிறார்கள். தோனியின் ஆண் ரசிகர்கள் ஒருபுறமும், பெண் ரசிகர்கள் ஒரு புறமும் பங்கேற்று அசத்தியிருக்கிறார்கள்.
இதேபோல் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளை விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் வழி வகுக்கிறது.