18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1ம் தேதி இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.. இதனால் ஏராளமான இளைஞர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவமனைகளுக்கு, தடுப்பூசி மையங்களுக்கும் செல்வதற்கு பதிலாக இணையத்தில் பதிவு செய்து அந்த நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4மணிமுதல் 18 வயதைக் கடந்தவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் ஆரோக்ய சேது செயலின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதை பதிவு செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்று அவசியம் என்று தெரியப்படுத்தியுள்ளது. அதே போல் உங்கள் செல்போன் நம்பரும் குறிப்பிடப்படவேண்டும். ஒரு செல்போன் நம்பரில் இருந்து நான்கு பேர் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நாம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.